உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா

காரைக்குடி முத்துமாரியம்மன் பூச்சொரிதல் விழா

காரைக்குடி:காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழாவையொட்டி, நேற்று காலை சேவைக்குழு சார்பில், 1008 பூத்தட்டு, மகர்நோன்பு பொட்டல், முத்தாலம்மன் கோயிலிருந்து, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்தது. மீனாட்சிபுரம் பூச்சொரிதல் விழா இளைஞர்கள் குழு சார்பாக, மதியம் அபிஷேகம்,சிறப்பு தீபாராதனை, இரவு பூ ரத ஊர்வலம், முத்தாலம்மன் கோயிலில் புறப்பட்டு, அம்மன் சன்னதி, கல்லுக்கட்டி, செக்காலைரோடு, முத்துபட்டணம் முதல் வீதி வழியாக முத்துமாரியம்மன் கோயில் வந்தடைந்தது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் அய்யர் சிவமணி, விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !