கோயிலுக்கு திறந்தவெளி வாகனத்தில் செல்லத்தடை!
ADDED :4663 days ago
மதுரை: மகாசிவராத்திரியை முன்னிட்டு, குலதெய்வம் கோயிலுக்கு, திறந்தவெளி வாகனத்தில் பயணிக்க மதுரை போலீசார் தடைவிதித்துள்ளனர். பாலகிருஷ்ணன் எஸ்.பி., கூறியதாவது:மார்ச் 9 முதல் 11 வரை, கருமாத்தூர், பாப்பாபட்டி, கொக்குளம், விக்கிரமங்கலம், கீரிப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள கோயிலுக்கு, பல்வேறு இடங்களில் இருந்தும் ஆட்கள் வருவர்.திறந்தவெளி வாகனத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும்பட்சத்தில், வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டூவீலரில், இருநபர்களுக்கு மேல் பயணிக்கக்கூடாது. பெண்கள் அதிக தங்க நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்கலாம், என்றார்.