ராஜபாளையம் அய்யனார் கோயிலில் அடிப்படை வசதிக்கான இடம் தேர்வு
ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் ராஜபாளையம் அய்யனார்கோயிலுக்கு, நடைபாதை மேம்பாலம் மற்றும் சுற்றுலா பயணிகள் அடிப்படை வசதிகளுக்கான இடம் தேர்வு நடந்தது.இந்த கோயில் செல்லும் பக்தர்கள், அய்யனார்கோயில் ஆற்றை கடந்து செல்லவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையில் பலத்த மழை பெய்தால், காட்டாற்று வெள்ளம் ஏற்படும். ற பக்தர்களை, வனம் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பது அடிக்கடி நடக்கும். சித்திரையில் நடக்கும் வெண்குடை திருவிழா, சபரிமலை சீசன்போது, இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். கோயில் செல்ல நடைபாதை மேம்பாலம், அடிப்படை வசதிகளை செய்ய பக்தர்கள் கோரினர். கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில், இந்த பகுதியை சுற்றுலா தலமாக மாற்றி, ஒரு கோடி ரூபாயில் அடிப்படை வசதிகள் செய்ய அறிவிக்கப்பட்டது.இதற்கான பணிகள் இதுவரை நடக்கவில்லை, நேற்று கலெக்டர் ஹரிஹரன், ரங்கன் ஆர்.டி.ஓ., அய்யனார்கோயில் பகுதி இடத்தை பார்வையிட வந்தனர். அவர்களை கோபால்சாமி எம்.எல்.ஏ., மற்றும் கிருஷ்ணாபுரம் ஊராட்சி பிரதிநிதிகள் வரவேற்றனர். தாசில்தார் தனலட்சுமி, சரோஜா ஆர்.ஐ., மற்றும் சர்வே துறையினர் பணிகள் நடக்க உள்ள இடத்தை அளந்தனர்.கோபால்சாமிஎம்.எல்.ஏ., கூறுகையில், ""பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, சமையலறை, தங்கும் அறை, கழிப்பிடம், குடிநீர் மற்றும் தெருவிளக்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. நடைபாதை மேம்பாலம் அமைக்க வனத்துறை ஒப்புதலுடன் பணிகள் துவங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன, என்றார்.