ஜெருசலேம் பயணத்திற்கு 891 பேர் விண்ணப்பம்!
ADDED :4603 days ago
தூத்துக்குடி: ஜெருசலேம் செல்ல, இதுவரை 891 கிறிஸ்தவர்கள் விண்ணப்பித்துள்ளனர், என, தமிழக சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பிரகாஷ் தெரிவித்தார். தூத்துக்குடியில் அவர் கூறியதாவது: கிறிஸ்தவர்கள் புனித தலமான ஜெருசலேம் சென்று வர, தமிழக அரசு ஒரு நபருக்கு, 20,000 ரூபாய் நிதிஉதவி வழங்குகிறது. இரண்டு ஆண்டுகளில், 1,000 பேரை, அங்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அப்புனிதப் பயணித்திற்கு, இதுவரை, 891 பேர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்டமாக, 42 பேர், அங்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.