உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மஹா சிவராத்திரி வழிபாடு

மஹா சிவராத்திரி வழிபாடு

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் மஹாசிவராத்திரியையொட்டி, வேதாரண்யேஸ்வரர் கோயிலில், சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. மஹாசிவராத்திரி உணர்த்தும் சாகா கல்வி என்னும் தலைப்பில், கடலூர் ராமலிங்க ஸ்வாமி பேசினார். திருநாவுக்கரசர் வார வழிபாட்டு மன்றத்தினர், தேவார, இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர். வேதாரண்யம், நாகை ரஸ்தா காசிவிஸ்வநாதர் கோயில், தோப்புத்துறை கைலாசநாதர் கோயில் உள்பட சிவன் கோயில்களில், நான்கு கால பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !