ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆலய பூமிபூஜை
ADDED :4628 days ago
விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆலய பூமிபூஜை கோலாகலமாக நடந்தது.விளாத்திகுளம் வசந்தம் நகரில் ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இதன் பூமிபூஜை கோலாகலமாக நடந்தது. ஸ்ரீஷீரடி சாய்நாதரின் திருவருள் துணை கொண்டு உலக நன்மைக்காகவும், சகல விதமான காரியசித்திக்காகவும் சாய்நாதரின் அனுக்கிரகம் வேண்டியும் விளாத்திகுளம் ஸ்ரீசாய்பாபா வழிபாடு மற்றும் பண்பாடு கழகம் சார்பில் கட்டப்படும் ஆலய பூமிபூஜை சென்னை கேளம்பாக்கம் ஆச்சாரியார் குருஜி தலைமையில் நடந்தது. இந்த பூமிபூஜையில் கல்லிடைகுறிச்சி, ராமநாதபுரம், சங்கரன்கோயில், தென்காசி உட்பட பல ஊர்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.