உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி அமாவாசை: ராமேஸ்வரம் கடலில் நீராடிய பக்தர்கள்

மாசி அமாவாசை: ராமேஸ்வரம் கடலில் நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரம்: மாசி அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், மாசி சிவராத்திரியின், பத்தாம் நாள் விழாவான நேற்று, அமாவாசை யொட்டி, மதியம் 1.30 மணிக்கு, கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினர். வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. பின், அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !