உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல், வலையபட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் சிவராத்திரையை முன்னிட்டு, பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை, சக்தி அழைத்து வந்து, பரம்பரையாளர்கள் தலையில் முதல் தேங்காய் உடைக்கப்பட்டது. நேற்று, 16 பக்தர்களின் தலையில், கோயில் பூஜாரி பூஜப்பன் தேங்காய் உடைத்தார். இன்று, பொங்கல் வைக்கப்படுகிறது. மாலையில், அம்மன் இடையகோட்டை சென்று, மஞ்சள் நீராடி, அரண்மனையில் பரம்பரையாளர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடக்கும். குரும்பா இன வம்சத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !