உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்டமானடி கோயிலில் மகா சிவராத்திரி வழிபாடு

கண்டமானடி கோயிலில் மகா சிவராத்திரி வழிபாடு

விழுப்புரம்:கண்டமானடி அபிராமேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது.விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் உள்ள முத்தாம்பிகை உடனமர் அபிராமேஸ்வரர் கோவிலில், மகா சிவாராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை கணபதி ஹோமத்துடன் முதல் கால பூஜை துவங்கியது.இரவு 7 மணி முதல் 8 மணி வரை குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பெண் கள் பங்கேற்று, சிவ பூஜை வழிபாடுகள் செய்தனர்.இரவு 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்கி, 108 சங்கு அபிஷேகமும், லிங்கோத்பவர் பூஜையும் நடந்தது. முத்தாம்பிகை அம்மன், அபிராமேஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.இதன் பின், இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை மற்றும் நான்காம் கால பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !