குல தெய்வ வழிபாடு அவசியம் என வலியுறுத்துகிறார்களே! ஏன்?
ADDED :4680 days ago
நம் முன்னோர் பரம்பரை பரம்பரையாக வணங்கிய தெய்வம் அது. அதற்கு சக்தி அதிகம். திருப்பதிக்கு போகும் முன்பு குலதெய்வத்தை வணங்கிவிட்டு வாருங்கள் என தேவஸ்தான தகவல் குறிப்பிலேயே உள்ளது. காரணம், மலையில் இருக்கும் கோயிலுக்குச் செல்லும்போது, விபத்துக்கள் ஏற்படுவது இயற்கையே. இந்த சமயத்தில் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு செல்வோருடன் அந்த தெய்வமே பாதுகாப்புக்காக உடன் வருவதாக ஐதீகம். நம் குலம் காக்கும் குலதெய்வ வழிபாட்டை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும்.