புவனேஸ்வரியின் வடிவம்!
ADDED :4603 days ago
அம்பாளுக்கு புவனேஸ்வரி என்ற திருநாமம் சூட்டப்பட்டுள்ளது. புவனம் என்றால் உலகம். மூன்று உலகங்களுக்கும் உணவளித்து காப்பவள் என்பதால் அவள் புவனேஸ்வரி எனப்பட்டாள். சிவனது மனைவியாகக் கருதப்படும் இவள், பிரகாசமான உடலை உடையவள். நெற்றியில் பிறை அணிந்திருப்பாள். மூன்று கண்களுடன் முகம் புன்னகையால் ஒளிவீசும். அவளது கையிலுள்ள பலன் செயல்களுக்கேற்ப
பலன் தருவதைக் குறிக்கும். மார்புகள் பால் நிறைந்து பெருத்திருப்பதன் மூலம் அவள் உலகிற்கே தாயாக இருந்து உணவூட்டுவதைக் குறிக்கும். நான்கு கைகளிலும் கயிறு, ஆயுதம், அபய வரதமுத்திரைகள் இருக்கும். புதுக்கோட்டையில் அம்பாளின் திருநாமம் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.