உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவா - விஷ்ணு கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

சிவா - விஷ்ணு கோவிலில் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

திருவள்ளூர்: சிவா - விஷ்ணு கோவிலில், ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.திருவள்ளூர், பூங்கா நகரில், சிவா - விஷ்ணு கோவில் மற்றும் ஸ்ரீஜலநாராயணன் சன்னிதி உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதையொட்டி, மூலவருக்கு காலை, 7:30 மணி முதல், 9:00 மணி வரை ஹோமம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. மாலை, 5:30 மணி முதல், 6:30 மணி வரை ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் சுப்பிரமணிய சுவாமிக்கு அலங்காரம் நடைபெற்றது.மாலை, 7:00 மணிக்கு வாணவேடிக்கைகளுடன் மாடவீதி உலா நடைபெற்றது. இரவு, 8:00 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.இந்த வைபத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்தனர்.திருத்தணிதிருத்தணி காந்தி நகரில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த, 21ம் தேதி கொடியேற்றத்துடன் தீ மிதி திருவிழா துவங்கியது.விழாவை முன்னிட்டு தினமும் காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மதியம், 1:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை சொற்பொழிவுவாளர் பார்த்திபனின் மகாபாரத சொற்பொழிவும். இரவு, 10:00 மணிக்கு நாடகமும் நடக்கிறது. நேற்று, காலை, 11:00 மணிக்கு கோவில் வளாகத்தில், திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அடுத்த மாதம், 7ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது.ஆர்.கே.பேட்டைஆர்.கே.பேட்டை அடுத்த, சுந்தரராஜபுரம், காந்தகிரி மலைக்கோவிலில் எழுந்தருளிய அகத்தீஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 11:00 மணி திருக்கல்யாணம் நடந்தது. இக்கோவில் ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு மேளதாளத்துடன் மலர் மாலை மற்றும் சீர்வரிசை பொருட்களுடன், கிராம மக்கள் ஊர்வலமாக மலைக்கோவிலுக்கு சென்றனர். அங்கு வேத விற்பன்னர்கள், மாந்திரங்கள் ஓத அகத்தீஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காணிக்கையை மொழிப் பணமாக பக்தர்கள் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !