கோதண்டராமர் கோவிலில் பவுர்ணமி ஸ்ரீராம பஜனை
ADDED :4596 days ago
செஞ்சி: செஞ்சி கோதண்டராமர் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீராம பஜனை நடந்தது. கோதண்டராமர் கோவிலில் பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஸ்ரீராம பஜனை நடந்தது. சுப்பிரமணிய பாகவதர் திருமால் வணக்கம் செய்தார். கோதண்டராமர் அறக்கட்டளை நிறுவனர் ரங்கராமானுஜதாசர் தலைமை தாங்கினார். ராமமூர்த்தி தேசிகதாசர், ஜெயராம தேசிக தாசர் முன்னிலை வகித்தனர். ஜானகி ஏழுமலை வரவேற்றார். உபயதாரர் பூபதி குணபூசனம் மற்றும் பஜனை கோஷ்டியினர் கலந்து கொண்டனர். ஜனார்த்தன தேசிக தாசர் நன்றி கூறினார். பஜனையை முன்னிட்டு கோதண்டராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.