பிரார்த்தனை செய்யும் போது கடவுளிடம் எதைக் கேட்பது?
ADDED :4598 days ago
உங்கள் ஊரும், பேரும் தித்திக்கும் தமிழ் மணத்தால் இனிக்கிறது. சங்க இலக்கியத்தில் பரிபாடல் என்றொரு நூலுண்டு. புலவர் இளவெயினனார். முருகப்பெருமானிடம் கேட்பதைப் பாருங்கள். யாம் இரப்பவை பொன்னும் பொருளும் போகமும் அல்ல; நின்பால் அருளும், அன்பும் என்று வேண்டுகிறார். வரையாது வழங்கும் வள்ளலாக பன்னிரு கரங்களால் அடியாருக்கு அருள்பவன் முருகன். அதனால், உங்களுக்கு எது தகுதியோ, தேவையோ அனைத்தையும் அருள்வான். முன் செய்த பழிக்கும், பயந்த தனி வழிக்கும் துணை முருகா என்னும் நாமம் அல்லவா! அவன் திருவடியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.