ஸ்ரீராமஜெயம் ஜெபித்து தூங்கச் சென்றால் கனவுத்தொல்லை வராதா?
ADDED :4601 days ago
பவித்ரமான நாமம் ராமநாமம். ராமனுக்கு கடலைக் கடக்க பாலம் தேவைப்பட்டது. ஆனால், ராம நாமத்தைச் சொன்ன அனுமன் கடலைத் தாவி இலங்கையை அடைந்தான். பகவானை விட பகவந் நாமாவுக்கு சக்தி அதிகம். அதனால், இரவில் மட்டுமல்ல பகலிலும் ராமஜெயத்தை ஜெபிப்பது நல்லது. கனவுத் தொல்லையில் இருந்து நீங்குவதோடு, வாழ்வில் வசந்தமும் தென்படும்.