உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனல்பறக்கும் நரசிம்மர் சிலை!

அனல்பறக்கும் நரசிம்மர் சிலை!

மைசூருவில் இருந்து 150 கி.மீ., தூரத்திலுள்ள பேலூர் சென்னகேசவர் கோயில் பிரகாரத்தைச் சுற்றி ராமாயண, மகாபாரத, தசாவதாரச் சிற்பங்கள் உள்ளன. இதில் இரண்யவதம் செய்யும் நரசிம்மர் சிற்பம் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்ஜித்தபடி தோற்றமளிக்கும் நரசிம்மர், கண்களில் அனல் பறக்கவும், முகத்தில் கனல் தெறிக்கவும் ஆவேசம் பொங்க காட்சி தருகிறார். முன்னிருகைகள் வயிற்றைக் கிழித்த நிலையிலும், பின்னிரு கைகள் குடலை மாலையிட்டபடியும் உள்ளன. விஷ்ணுவின் பிரதான சின்னங்களான சங்கு சக்கரத்தை இருகைகள் தாங்குகின்றன. ஒருகை கண்ட நாதமாய் மணியோசை எழுப்புகிறது. ஒருகை இரண்யனின் கையையும், ஒருகை தொடையை நகத்தால் கிழித்தும் கோபத்தை வெளிப்படுத்துகிறது. பெருமாளின் பாதத்தில் அசுரர்கள் அஞ்சியபடியும், கருடாழ்வார் கைகூப்பிய நிலையிலும் நிற்கின்றனர். இந்தச்சிலை இரண்ய சம்ஹாரத்தை நம் கண்முன்னே நிறுத்துகிறது என்றால் மிகையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !