ஸாகேதபுரி ராமா! கோலேக கிருஷ்ணா!
ADDED :4780 days ago
ராம கிருஷ்ண அவதாரங்கள் முடிந்தபின், மகாவிஷ்ணு வைகுண்டம் கிளம்பினார். அயோத்தியில் ஓடும் சரயுநதிக்குள் இறங்கி ராமன் தன் உயிரைப் போக்கிக் கொண்டதாக ராமாயணம் கூறுகிறது. ஜரன் என்னும் வேடன் விடுத்த அம்பினால் கண்ணன் உயிர்துறந்ததாக மகாபாரதம் குறிப்பிடுகிறது. ஆனாலும், இன்றும் ராமனும் கண்ணனும் தனித்தனி உலகங்களில் நித்யமாய் வாசம் செய்வதாக ஐதீகம். ராமபக்தியில் ஈடுபடுபவர்கள் இப்பிறவி முடிந்த பின் ஸாகேதபுரி என்னும் உலகத்தையும், கிருஷ்ணபக்தி கொண்டவர்கள் கோலோகம் என்னும் உலகத்தையும் சென்றடைவர். ராமனின் அயோத்திக்கு ஸாகேதபுரி என்ற பெயரும் உண்டு.