மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :4610 days ago
திருநெல்வேலி: மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் நாளை (30ம் தேதி) சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் நடக்கிறது. நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோடு மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. விநாயகருக்கு ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள கோயில். இக்கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நாளை மாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இக்கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் நடந்துவருவது குறிப்பிடதக்கது.