வீர ராகவர் புட்லூர் திருவூரல் மகோத்சவம்
திருவள்ளூர்: வீர ராகவ பெருமாள், புட்லூர் திருவூரல் மகோத்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, திருமஞ்சனமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூரில் உள்ள வீர ராகவ பெருமாள், ஆண்டுதோறும் புட்லூர் கிராமத்திற்கு விஜயம் செய்வது வழக்கம். இது, திருவூரல் மகோத்சவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவூரல் மகோத்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று வீர ராகவர் கோவிலில் இருந்து, உற்சவர் பெருமாள் விடியற்காலை, 5:00 மணிக்கு புட்லூர் புறப்பட்டு சென்றார். அங்கு மதியம், 1:00 மணிக்கு திருமஞ்சனம் முடிந்த பின், இரவு, 9:30 மணிக்கு, புட்லூர் கிராமத்தில் வாணவேடிக்கைகளுடன் திருவீதி புறப்பாடு நடைபெற்றது. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புட்லூரில் இருந்து பெருமாள் திருவள்ளூர் கோவிலுக்கு திரும்பி சென்றார். வழிநெடுகிலும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, வீரராகவர் கோவில் கவுரவ ஏஜன்ட் சம்பத் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.