உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா தலங்கள் அதிகம்!

தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா தலங்கள் அதிகம்!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஹோட்டல் மேனேஜ் மெண்ட் கல்லூரியில், "இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சியில் விருந்தோம்பல் தொழிலின் தாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழக அரசின் முதன்மை செயலரும், கலைப்பண்பாட்டுத் துறை ஆணையருமான ஜவகர் பேசியதாவது: சுற்றுலா வளர்ச்சிக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த வளர்ச்சியில் உணவாக்கத் தொழில்நுட்பம், உணவு சேவை, விருந்தோம்பல் ஆகியவை முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. தமிழகத்தில் ஆன்மிக சுற்றுலா தலங்களின் எண்ணிக்கை அதிகம்.தேசிய அளவில் திருப்பதி, தாஜ்மஹாலுக்கு அடுத்து தமிழக சுற்றுலா தலங்கள் உள்ளன. கோவில் புராதன சின்னங்கள். நினைவிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு செல்ல வேண்டுமானால், அப்பகுதியில் உணவு சேவை, விருந்தோம்பால் போன்றவை சிறப்பாக இருக்கிறதா? என்பதை சுற்றுலா பயணிகள் பார்க்கின்றனர்.விருந்தோம்பல் சிறப்பாக இருந்தால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் இருக்கும்.அந்த அடிப்படையில் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்களுக்குத் தேவையான உணவு பாதுகாப்பு, விவரங்கள், குறிப்புகள், புத்தகங்கள், வழிகாட்டிகள் போன்றவை இருக்கின்றன.இதனால் தமிழகத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். எதிர்காலத்தில் விருந்தோம்பல் துறையில் மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் பாரத் கல்விக்குழு செயலர் புனிதா கணேசன், மேலாண்மை நிறுவன இயக்குனர் சிதம்பரம், பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரி முதல்வர் வீராசாமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக நிறுவன முதல்வர் சுகுமார் வரவேற்றார்.முதுநிலை விரிவுரையாளர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !