உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி விழா துவங்கியது!

விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனி விழா துவங்கியது!

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, கொடிஏற்றத்துடன் நேற்று துவங்கியது. நேற்று இரவு 8 மணிக்கு பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள கொடிஏற்றப்பட்டது. பங்குனி பொங்கல் விழாவில், அம்மன் தினமும் வெள்ளி ரிஷப வாகனம், வெள்ளி சப்பரம்,தங்க குதிரை வாகனம், புஷ்பபல்லக்கு, சமணர்களை கழுவேற்றி, நகர் வலம் வருதல் நடக்க உள்ளது. தினமும் இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. ஏப்., 7 ல் பொங்கல், ஏப்., 8 ல் கயிறு குத்து, அக்னி சட்டி நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 9 ல் வெயிலுகந்தம்மன், பாரசக்தி மாரியம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஏப். 11 ல் அம்மன் நகர்வலம் வந்து மஞ்சள் நீராடி, மாலை 4 மணிக்கு கொடியிறக்கப்படுகிறது. பொங்கல் விழாவில் தமிழகம் முழுவதுமுள்ள பக்தர்கள் கலந்து கொள்வர். இதைதொடர்ந்து கே.வி.எஸ்., ஆண்கள் பள்ளியில் பொருட்காட்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் சுப்பிரமணியநாடார், நிர்வாக காரியதரிசி வேலு நாடார், உதவி தலைவர் கேசவன் நாடார், உதவி காரியதரிசி ஜெகதீசநாடார், பொருளாளர் பாலகிருஷ்ணநாடார் மற்றும் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !