உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலூர் தங்கக்கோவிலில் ஸ்வர்ண லட்சுமி பிரதிஷ்டை!

வேலூர் தங்கக்கோவிலில் ஸ்வர்ண லட்சுமி பிரதிஷ்டை!

வேலூர்: வேலூர் தங்கக்கோவிலில், ஸ்வர்ண லட்சுமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர் அடுத்த, திருமலைக்கோடி ஓம் சக்தி நாராயணி பீடத்தில், 70 கிலோ தங்கத்தில், ஸ்வர்ணலட்சுமி ஸ்வாமி சிலை செய்து, பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தது. நாராயணி பீடத்தில், 48 நாட்கள் மண்டல பூஜைகள், மகா லட்சுமி யாகங்கள் நடந்தது.நேற்று முன் தினம் காலை, 5 மணி முதல் தொடர்ந்து, 16 ஆயிரம் முறை சூக்த ஹோமம், 16 ஆயிரம் முறை கா லட்சுமி ஹோமம் நடந்தது. மகா தீபாராதனையைத் தொடர்ந்து ஸ்வர்ண லட்சுமிக்கு பூர்ண அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது.நேற்று, யானை மீது ஸ்ரீ புரம் தங்கக்கோவிலுக்கு ஸ்வர்ண லட்சுமி சிலை கொண்டு சென்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் தங்கள் கைகளால், ஸ்வர்ண லட்சுமிக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சக்தி அம்மா தலைமையில் நடந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !