உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி தெப்ப உற்சவம்!

மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி தெப்ப உற்சவம்!

மன்னார்குடி: மன்னார்குடியிலுள்ள ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர்.வைணவ ஸ்தலங்களில் புகழ் பெற்றதும் தெட்சண தென் துவாரகை எனவும், தென்திருப்பதி எனவும் பக்தர்களால் அழைக்கப்படும் மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, நேற்று முன்தினம் இரவு பங்குனி பிரம்ம உற்சவ திருவிழா வெகுவிமர்சையாக நடந்தது.தெப்ப உற்சவத்தையொட்டி கடந்த 18 நாட்களும் ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமி, பல்வேறு அலங்கார வாகனங்களில் தோன்றி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார். இதை தொடர்ந்து, 12 நாட்கள் விடையாற்றி விழா வெகுகோலாகலமாக நடந்தது.இதன் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு ஸ்ரீ வித்ய ராஜகோபால ஸ்வாமிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ருக்மணி, சத்யபாமா சமேதமாக நான்கு முக்கிய வீதிகளில் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து, இரவு 9 மணியளவில் கிருஷ்ண தீர்த்த தெப்பத்தில் ஸ்ரீ ராஜகோபால ஸ்வாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு எழில்மிகு காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவ திருவிழாவை காண நேற்று முன்தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.விழா ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !