உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பால்குடம்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பால்குடம்

தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில்,1,500 பெண் பக்தர்கள் பங்கேற்கும் பால்குட ஊர்வலம் இன்று (2ம் தேதி) நடக்கிறது.தஞ்சை அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவில் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.பழனி முருகனுக்கு மாலை அணிவித்து, கால்நடையாக காவடி தூக்கி, அலகு குத்தி பாதயாத்திரையாக செல்வது போல, புன்னைநல்லூர் மாரியம்மனுக்கும் அலகு குத்தி, கிராமங்களிலிருந்து பாதயாத்திரை வருகின்றனர். இத்தகைய பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பிராமணாள் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில், பால்குட ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவையொட்டி கடந்த, 29ம் தேதி தஞ்சை மேலவீதி சங்கரமடத்தில் அம்பாள் கடஸ்தாபனமும், அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து, 31ம் தேதி காலை எட்டு மணிக்கு சண்டிஹோமமும், மதியம், 12 மணிக்கு கஞ்சி வார்த்தலும், மாலை அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்தனர்.இதைத் தொடர்ந்து, பால்குட ஊர்வலம் இன்று (2ம் தேதி) வெகுவிமர்சையாக நடக்கிறது. காலை, 7:45 மணிக்கு சிவகங்கை பூங்காவிலிருந்து, 1,500 பெண் பக்தர்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக புறப்படுகின்றனர்.இதில், மேலவீதி, வடக்கு வீதி, கீழவாசல் வழியாக, மதியம், 12 மணிக்கு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலை அடைகிறது. தொடர்ந்து, அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகமும், பின்னர் அன்னதானமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !