உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழா

மாகாளியம்மன் கோவில் பூக்குண்டம் திருவிழா

வால்பாறை: வால்பாறை டவுன் காமராஜ்நகர் மாகாளியம்மன், கருப்புசாமி கோவிலின் 21ம் ஆண்டுதிருவிழாவும், 8ம் ஆண்டு பூக்குண்ட திருவிழாவும் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் கடந்த 29ம் தேதி இரவு 8.00 மணிக்கு அம்மன் சக்தி அழைத்துவரப்பட்டது. விழாவில் நேற்றுமுன்தினம் காலை 11.30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணமும், மதியம் 1.00 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. மாலை 4.00 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து பூவோடு, மாவிளக்கு எடுத்தும், அலகு பூட்டியும் , முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு இரவு 8.00 மணிக்கு வந்தனர். அதன் பின் கோவில் அருளாளி முதலில் பூக்குண்டம் இறங்கியதை தொடர்ந்து , பக்தர்கள் பக்திபரவசத்துடன் பூக்குண்டம் இறங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !