மேலும் செய்திகள்
பிரதமர் மோடி பிறந்த நாளில் ஒளிர்ந்த 1,460 விளக்குகள்
4551 days ago
பிரதமருக்காக காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
4551 days ago
சேத்தாண்டி வேடமணிந்து பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்
4551 days ago
ஒளவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள் இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம் என்று அவர்கள் கூறினராம். இதைக்கேட்ட ஒளவையார், இவ்வளவுதானா, இதற்காகவா கவலை கொண்டுள்ளீர்கள் என்று கூறி கோடி என்ற வார்த்தையை அடக்கிய 4 பாடல்களைக் சொன்னார். இதுவே நாலு கோடிப் பாடல்கள் எனப்படும். நூல்மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்றுமிதியாமை கோடி பெறும் உண்ணீர் உண்ணீரென்று உபசரியார் தம்மனையில்உண்ணாமை கோடி பெரும் கோடி கொடுப்பினும் குடிப்பிறந்தார் தம்முடனேகூடுதலே கோடி பெறும் கோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்கோடாமை கோடி பெறும் நாலு கோடிப் பாடல்கள் முற்றிற்று.
4551 days ago
4551 days ago
4551 days ago