வரசித்தி விநாயகர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :4604 days ago
புதூர்: மதுரை புதூர் சிட்கோ காலனி வரசித்தி விநாயகர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு அபிஷேகம், அலங்காரம் நடந்தன. தினமும் திருவிளக்கு பூஜை, சந்தன காப்பு, சக்தி கரகம் எடுத்தல், பாலாபிஷேகம், பக்தர்களின் பொது பொங்கல் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. சுவாமி புறப்பாடு, முளைப்பாரி, பூச்சொறிதல், அன்னதானம் நடந்தன. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.