உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரிஷபம்: பணவரவில் திருப்தி!

ரிஷபம்: பணவரவில் திருப்தி!

பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட ரிஷபராசி அன்பர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 12ம் இடத்திலும், ஆறாம் இடத்தில் சனி, ராகுவின் அமர்வும்நற்பலன்களைத் தரும் விதத்தில் உள்ளது. உறவினர் மூலம் நல்ல ஆலோசனை கிடைக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மைக்கு வழிவகுக்கும். பணவரவு திருப்தி அளிக்கும். சகோதரர் வகையில் மங்கள நிகழ்ச்சி நடத்திட யோகமுண்டு. வீடு, வாகனத்தை மாற்றும் எண்ணம் உருவாகலாம். பிள்ளைகளின் படிப்பில் சிறந்து விளங்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியம் பலப்படும்.  தம்பதியர் ஒற்றுமை சிறக்கும். எதிர்கால வளர்ச்சி குறித்து அடிக்கடி ஆலோசிப்பர்.  தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு லாபம் குவிப்பர். வியாபாரிகள் புதுமைகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுப்பர்.  பணியாளர்கள் திட்டமிட்டபடி பணிகளைச் செய்து முடிப்பர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவர். செலவுக்குத் தேவையான பணம் தாராளமாகக்கிடைக்கும். விரும்பிய ஆடை, ஆபரணங்களையும் வாங்கி மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தினர் மத்தியில் நற்பெயர் காண்பர். பணியிடத்தில் சுதந்திரமாகப் பணியாற்றி மகிழ்வர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தியை அதிகரித்து லாபத்தைப் பெருக்குவர். கணவர், தோழியின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அரசியல்வாதிகள் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுங்குவர். தலைமையின் இணக்கத்திற்குரி யவராகத் திகழ்வர். விவசாயிகளுக்கு நல்ல மகசூலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தேர்வுகளை சிறப்பான முறையில் எழுதி முடிப்பர்.

பரிகாரம்: விஷ்ணுவை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.
உஷார் நாள்: 29.4.13 காலை 11.43- 1.5.13 மதியம் 2.09.
வெற்றிநாள்: ஏப்.18,20
நிறம்: வெள்ளை, ரோஸ்
எண்: 2,9


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !