மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து, எர்ரப்பட்டியில் ஊர் மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வரும், 15ம் தேதி நடக்கிறது. இதையொட்டி இன்று இரவு, 9 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது. நாளை காலை, 9 மணிக்கு கணபதி ஹோமம், கொடியேற்றமும், மதியம், 2 மணிக்கு அக்னி சங்கிரணமும், மாலை, 3 மணிக்கு நந்தி பூஜையும், 6 மணிக்கு விநாயகர் பூஜை, தீபாராதனையும் நடக்கிறது.இரவு, 9 மணிக்கு கும்ப அலங்காரமும், ரக்ஷபந்தனமும், யாகசாலை பிரவேஷமும், முதல் கால யாகபூஜையும், இரவு, 11 மணிக்கு பூர்ணாஹூதியும் தீபாராதனையும், நள்ளிரவு, 12 மணிக்கு அஷ்டபந்தன சாத்துதலும், தீபாராதனை நடக்கிறது.வரும், 15ம் தேதி காலை, 6 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், காலை, 8.30 மணிக்கு நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதியும், மஹா தீபாராதனையும், காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும், தொடந்து மஹா அபிஷேகமும், மஹா தீபாராதனையும், 10 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.