உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவனீத கிருஷ்ணன் கோவிலில் பிரம்மோற்சவ விழா

நவனீத கிருஷ்ணன் கோவிலில் பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி: குயவர்பாளையம் நவனீதகிருஷ்ணன் கோவிலில் பத்தாம் ஆண்டு சித்திரை பிரம்மோற்சவ விழா, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை திருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு அங்குரார்ப்பணமும் நடக்கிறது. நாளை 14ம் தேதி காலை 10.30 மணிக்கு சித்திரை விழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்சிவிகை நடக்கிறது. 15ம் தேதி காலை 9 மணிக்கு ஸூக்தஹோமம் செய்து சூரியப்ரபையும், 16ம் தேதி காலை சுதர்சனஹோமம் செய்து சேஷவாகனத்திலும், 17ம் தேதி புருஷசுதர்சன ஹோமம் செய்து கருடசேவையும், 18ம் தேதி ராமகாயத்ரி ஹோமம் செய்து அனுமந்த வாகனத்திலும், 19ம் தேதி அஷ்டலட்சுமி ஹோமம் செய்து யானை வாகனத்திலும் சுவாமி அருள்பாலிக்கிறார். 20ம் தேதி தன்வந்தரிஹோமம் செய்து புன்னை மரவாகனத்திலும், 21ம் தேதி ஹயக்ரீவ ஹோமம் செய்து குதிரை வாகனத்திலும் மாலை 6 மணிக்கு நவனீதகிருஷ்ணன் வீதியுலா வருகிறார். 22ம் தேதி காலை 9 மணிக்கு திருத்தேர் வீதியுலா நடக்கிறது. மாலை வாதச ஆராதனமும், துவஜா அவரோஹணம் நடக்கிறது. 23ம் தேதி மாலை ஸ்ரீநிவாசப் பெருமாள், பூவராஹர் ஸ்ரீஸூதாராம்பிரான், கோதா சமேத ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனை கூடத்தினரால் திவ்ய நாம பஜனை மற்றும் டோலோத்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !