கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை எடுத்த பூசாரி!
ADDED :4630 days ago
திருக்கோவிலூர்: கோவில் தீமிதி விழாவில், கொதிக்கும் எண்ணெய் சட்டியில், கோவில் பூசாரி, வெறுங்கையால் வடையெடுக்கும் விநோத நிகழ்ச்சி நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த செட்டித்தாங்கல், ஏரிக்கரையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, சித்திரை வருட பிறப்பை ஒட்டி, நேற்றுமுன்தினம், தீமிதி திருவிழா நடந்தது. காலையில், பத்ரகாளி அம்மனுக்கு பால்குட அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 5.00 மணிக்கு, கோவில் பூசாரி, வையாபுரி சக்திவேல், அக்னி குண்டத்தில் இறங்கியபின், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர், வாணலில் கொதிக்கும் எண்ணெயில், வேக வைக்கப்பட்ட, கம்பு வடையை வெறும்கையை விட்டு எடுத்து, பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர், நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது. இதில் மிளகாய் வற்றலை பக்தர்கள் செலுத்தி வழிபட்டனர்.