உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்: ஏப். 24ல் திருக்கல்யாணம்!

உத்தரகோசமங்கை கோயிலில் சித்திரை விழா கொடியேற்றம்: ஏப். 24ல் திருக்கல்யாணம்!

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், நேற்று காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக ஏப்., 24 மதியம் 3 மணிக்கு திருக்கல்யாணம், 25ல் காலை 10.30 மணிக்கு தேரோட்டம். ஏப்.,26 மாலையில் தீர்த்தவாரி வழங்குதல் நடைபெறுகிறது. தினமும் இரவு, ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை, ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !