சதுரகிரி கோயில் உண்டியல் திறப்பு: ரூ. 37.75 லட்சம் வசூல்!
ADDED :4524 days ago
வத்திராயிருப்பு: மலைவாச சிவஸ்தலமான சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில், ஆண்டிற்கு மூன்று முறை உண்டியல்கள் திறந்த எண்ணப்படும். இந்த ஆண்டிற்கான இரண்டாவது உண்டியல் திறப்பு நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோயில் தக்காருமான பச்சையப்பன், மதுரை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி, ஆய்வாளர் ராஜவேல், கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி ஆகியோர் முன்னிலையில் பணம் எண்ணிக்கை நடந்தது. சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் 33.31 லட்சம், சந்தனமகாலிங்சுவாமி கோயிலில் 4.44 லட்சம் ரூபாய், வசூலானது. இவை அனைத்தும் மூடையாக கட்டப்பட்டு பலத்த பாதுகாப்புடன். பணியாளர்கள் மூலம் மலை அடிவாரம் கொண்டுவரப்பட்டது.