சந்தகடை மாரியம்மன் கோவில் விழா
ADDED :4569 days ago
கூடலூர்: மேல் கூடலூர் சந்தகடை மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது.மேல் கூடலூர் சந்தகடை மாரியம்மன் கோவில் ஆண்டு விழாவை தொடர்ந்து, கடந்த 15ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் மாவிளக்கு பூஜை நடந்தது. 16ம் தேதி இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட திருதேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை கூடலூர் ஆர்.டி.ஓ., ஆதிமூலம், டி.எஸ்.பி., திருமேணி ஆகியோர் வடம் பிடித்து துவங்கி வைத்தனர். ஊர்வலம், நடுகூடலூர், கூடலூர் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது. 17ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. பிற்பகல் மஞ்சள் நீராட்டு விழாவும், விழாவை முன்னிட்டு, அன்னாதனம் வழங்கப்பட்டது.