உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா கோலாகலம்

நெல்லையப்பர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழா கோலாகலம்

திருநெல்வேலி: தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.தச்சநல்லூர் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி துவங்கியது. விழாவில் 9வது நாளான நேற்று காலை 5 மணிக்கு வருஷாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 10.20 மணிக்கு திருத்தேர், பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நமச்சிவாய கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரதவீதிகளிலும் வலம் வந்து நிலையத்தை வந்தடைந்தது. தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை, தேர் தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், குடிநீர் வழங்கப்பட்டது. இரவு சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. இன்று (19ம் தேதி) காலை 9 மணிக்கு சுவாமி, அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் வைபவம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பைரவர் பூஜை நடக்கிறது.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !