புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED :4635 days ago
திருநெல்வேலி:பாளை.மனகாவலம்பிள்ளை நகர் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாளை.மனகாவலம்பிள்ளை நகர் அண்ணாத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆலயத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆலயத்திருவிழா கொடியேற்றம் ஆலய வளாகத்தில் நேற்று நடந்தது. பாளை.மறை வட்ட முதல்வர் அந்தோணி குரூஸ் கொடியேற்றிவிழாவை துவக்கி வைத்தார். மதுரை பாதிரியார் ஜான் சேவியர் மறையுரை நடந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.வரும் 27ம் தேதி வரை 10 நாள் நடைபெறும் விழாவில், தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புனிதரின் பிரார்த்தனைகள், நவநாள் திருப்பலி, சிறப்பு மறையுரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சாந்திநகர் பங்குத்தந்தை அல்போன்ஸ் அடிகளார் செய்துள்ளார்.