அயோத்தியில் ராமநவமி கொண்டாட தடைவிதிப்பு!
ADDED :4625 days ago
அயோத்தி: கடந்த 64ஆண்டுகளில் முதன் முறையாக அயோத்தியில் ராமநவமி விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் தடை வி்தித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட ராமநவமி விழா அயயோத்தியில் உற்சாகமின்றி காணப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு அமலில் இருந்த போதிலும் ராமநவமி உற்சாக மாக கொண்டாடப்பட்டு வந்தது. இந்தாண்டு முதல் தடை உத்தரவு கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவி்த்துள்ளது.