உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவிரிப்பெண்ணே வாழ்க!

காவிரிப்பெண்ணே வாழ்க!

ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் நீரின்றி அமையாது உலகம் போன்ற பழமொழிகள் நீரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. நதிக்கரையோரங்களில் தான் மனிதன் நாகரிகத்தை கற்றுக் கொண்டதாக வரலாறு சொல்கிறது. நமது பண்பாட்டில் நதியைப் பெண்ணாக போற்றி வணங்குவது மரபு. கங்கா மாதா எனப்படும் கங்காநதிக்கு, தினமும் மாலை நேரத்தில் ஆரத்தி நடத்துவர். அப்போது தீபங்களை ஏற்றி ஆற்றில் மிதக்க விடுவர். இதைப்போல, ஆண்டிற்கு ஒருமுறை ஆடிப்பெருக்கு நாளில் காவிரிநதியை வழிபடுகிறார்கள். அப்போது, காவிரித்தாய்க்கு மலர்தூவி மஞ்சள், குங்குமத்தால் பூஜை செய்வர். புதுமணத்தம்பதியர் ஆற்றில் நீராடி புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். நீர்வளம் பெருகி வளமான வாழ்வு அமைய வேண்டிக்கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !