சிவபாத சேகரன் யார் தெரியுமா?
சக்கரவர்த்தி, மன்னர்மன்னன், ராஜாவுக்கெல்லாம் ராஜா என்று நாம் ஒருத்தனைக் கொண்டாடுகிறோம். ஆனால், அவனோ தன் தலையில் நவரத்ன கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பதை விட, அந்தச் சிரசிலே தனக்கும் ராஜாவாக இருக்கப்பட்ட சிவனின் காலை அழுந்த வைத்துக் கொண்டால், அது தான் பெரிய ஆபரணம் என்று பெருமைப்பட்டான். அதனால் தான் அவனை, ராஜராஜசோழன் என்று நாம் போற்றுகிறோம். தன்னை எப்போதும் ஸகலலோக சக்கரவர்த்தியான பரமேஸ்வரனின் தொண்டனாக நினைத்துக் கொண்டு, அந்த சந்திரசேகரனின் திருவடி தன் முடியில் சூட்டப்பட்டிருப்பதாக பாவித்து ஸந்தோஷப்பட்டுக் கொண்டான். சிவபாத சேகரனாக ஆண்டவனுக்கு அடங்கி யிருப்பதையே உயர்வாக நினைத்தான். தலையின் உச்சியில் சகஸ்ரார கமலம் என்ற ஆயிரம் இதழ் கொண்ட தாமரைப்பூ இருக்கிறது. சாதனை மூலம் குண்டலினீ சக்தியை மேலே கொண்டு போனால் அந்த தாமரையிலே குரு ரூபமாக இருக்கிற ஈஸ்வரனின் பாத கமலம் தெரியும். அந்த கமலத்திலிருந்து பெருகுகிற அமிர்தத்தில் நம் நாடி நரம்பெல்லாம் குளிர்ந்து, ஜீவபாவமே அடித்துக் கொண்டு போய்விடும். பரமாத்மாவோடு பரமாத்மாவாக ஐக்கியப்படும் மோக்ஷõனந்தம் ஸித்திக்கும். சிவனின் பாதத்தை தலைமேல் வைக்கும்படி ராஜராஜ சோழன் பிரார்த்திப்பதற்கு இதுதான் உள்ளர்த்தம்.
-காஞ்சி பெரியவர்