ஞானானந்தா தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழா
ADDED :4647 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் நடந்த சித்ரா பவுர்ணமி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் நேற்று சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இவ்விழா சிவரத்னகிரி சுவாமிகள் நினைவாக ஞானானந்தகிரி சுவாமிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு அதிஷ்டானத்தில் மஹன்யாஸ ஏகாதச ருத்ர ஜபம், மூர்த்திகள் அபிஷேகம், 6 மணிக்கு கணபதி ஹோமம், 7 மணிக்கு பாதபூஜை நடந்தது. 8 மணிக்கு அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், 11: 00 மணிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு மணி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு அதிஷ்டானத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.