குளிக்க தயங்கும் பெருமாள்!
ADDED :4941 days ago
சிவபெருமானைப் பித்தா பிறைசூடி என்று சுந்தரர் தேவாரத்தில் பாடுகிறார். பித்த உடம்புள்ளவர்களுக்கு எப்போதும் குளித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று தோன்றும். அதனால் சிவபெருமான் அபிஷேகப்பிரியராக இருக்கிறார். வாத உடம்புக்காரர்களுக்கு உடல்நிலை குளிர்ச்சியாக இருக்கும். அவர்கள் வழக்கமான குளியலுக்கு கூட கொஞ்சம் யோசிப்பதுண்டு. கோயிலில் பெருமாளுக்கு திருமஞ்சனத்தை (அபிஷேகம்) காட்டிலும் அலங்காரத்திற்கே முன்னுரிமை அளிப்பர். பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகத்தை சம்ப்ரோக்ஷணம் என்பர். ப்ரோக்ஷணம் என்றால் தெளித்தல்.