நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் கோலாகலம்
ADDED :4578 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா, கடந்த 24ம் தேதி துவங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு, குதிரை வாகனஉற்சவம் நடந்தது.நேற்று காலை, நித்யகல்யாணப் பெருமாள் அலங்கார பல்லக்கில் வீதியுலா சென்றார். சுவாமிக்கு, திருக்கல்யாண தீர்த்த குளத்தில், சிறப்பு திருமஞ்சனமும், சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி உற்வசமும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.