காளஹஸ்தி கோவில் உண்டியல் மூலம் ரூ.74 லட்சம் வசூல்
ADDED :4578 days ago
நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியல் மூலம், கடந்த ஒரு மாதத்தில், 74 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. காளஹஸ்தி கோவிலில், பாபு லிங்கேஸ்வர சுவாமி ஞான பிரசுனாம்பிகை தாயார் சன்னதி மற்றும் பரிவார தேவதை சன்னதிகளில் உள்ள உண்டியல் காணிக்கைகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. இதில், 74 லட்சம் ரூபாயும், 100 கிராம் தங்கமும், 438 கிராம் வெள்ளியும், 115 வெளிநாட்டு கரன்சிகளும் உண்டியல் எண்ணப்பட்டதன் மூலம் கிடைத்துள்ளது. கடந்த, 31 தினங்களில் இத்தொகை வசூலானதாக, கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.