உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவிற்கு கொடியேற்றம்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவிற்கு கொடியேற்றம்

திருத்தணி: திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வரும், 12ம் தேதி தீ மிதி திருவிழா நடக்கிறது. திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், 8ம் ஆண்டு தீமிதி திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தனக்காப்பு, சிறப்பு பூஜைகள் நடந்தன. மதியம், 1:00 மணிக்கு வரலட்சுமி தாகவாதரணியில் மகாபாரத சொற்பொழிவு, 5:00 மணி வரை தொடர்ந்து நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன், கிராம வீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !