உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடன்குடி சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

உடன்குடி சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

உடன்குடி: உடன்குடி அருகே சீர்காட்சி பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உடன்குடி அருகே சீர்காட்சியில் ஏழாயிரம் பண்ணை எட்டாம் கூட்ட நாடார் பெருமக்கள், சீர்காட்சி ஊர் பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்திப்பெற்றது.இக்கோயில் மஹா கும்பாபிஷேக விழா கடந்த (ஏப்.29ம் தேதி) மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாஜனம், பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை திராவிட கானம், வேதபாராயணம், விஷேட சந்தி, பூத சுத்தி, யாகசாலைபூஜை நடந்தது. நான்காம் காலயாக சாலை, தோரண பூஜை, பஞ்சாசன பஞ்சமா வர்ண பூஜை, சதுர்வேத கும்ப பூஜையாக யாகீஸ்வரி கலச பூஜை, அக்னி காரியம், நான்காம் கால யாகசாலை அஸ்த்திர ஹோமம்நடந்தது. காலை 7.30 மணிக்கு யாத்ரா தானம், கோபூஜை, யாத்ரா தானத்துடன் கடம் புறப்பாடு, காலை 7.35 மணி முதல் காலை 8.22 மணிக்குள் விமான கோபுர அபிஷேகமும், மூலஸ்தான மூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் கோவை ஜி.கே.குரூப் நிறுவனர் காளியப்பன், மாநில இந்து முன்னணி துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஏழாயிரம் பண்ணை எட்டாம் கூட்ட நாடார் பெருமக்கள், சீர்காட்சி ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !