உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் திருப்பணிகள் தீவிரம்

ஆழ்வார்குறிச்சி: கடையம் முப்புடாதி அம்மன் கோயிலில் வரும் ஜூலையில் நடக்க இருக்கும் கும்பாபிஷேகத்திற்காக வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. கடையம் வடக்கு ரதவீதியில் முப்புடாதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஓடுகளால் வேயப்பட்டிருந்த கொட்டகை அகற்றப்பட்டு தற்போது கான்கிரீட் முன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் அருகேயுள்ள மயிலாடியில் இருந்து விசேஷ கற்களை வரவழைத்து சுமார் 3500 சதுர அடியில் விசாலமான முறையில் கற்களால் ஆன தளம் அமைக்கப்பட்டுள்ளது. நவீன வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டப வேலைகள் நடந்து வருகிறது. கோயில் முழுவதும் சுவர்கள் கற்கள் பதிக்கப்பட்டு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் சாலைகோபுரம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. வரும் ஜூலை மாதம் 15ம்தேதி கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்து முப்புடாதி அம்மன் பக்த பேரவையினர் முழுவீச்சில் வேலை நடத்தி வருகின்றனர். இத்திருப்பணிக்கு உதவி செய்ய விரும்புவோர் 94439-71515, 94425-41078, 94438-51776 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என திருப்பணிக்குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !