உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு!

மழை வேண்டி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு!

குறிச்சி: மாஸ்திகவுண்டன்பதியில், மழை வேண்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.க.க.சாவடியை அடுத்த மாஸ்திகவுண்டன்பதியில் உள்ள விநாயகர் கோவிலில், நேற்று காலை 7:30 மணிக்கு, 108 குடம் தண்ணீர் ஊற்றி, வழிபாடு நடந்தது. அருகேயுள்ள செல்வவிநாயகர் மற்றும் பொது விநாயகருக்கும் வழிபாடு நடந்தது. 108 தேங்காய் உடைக்கப்பட்டது. மதியம் அபிஷேக ஆராதனையும், பொங்கல் வைத்து, சிறப்பு பூஜையும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, மழை வேண்டி, விநாயகர்களை வழிபட்டனர். பூஜாரி கந்தசாமி, பூஜைகளை செய்தார். ஊர்கவுண்டர் வேலுசாமி, கவுன்சிலர் முருகேஷ், சம்பத்குமார் மற்றும் முத்துவேல் உள்ளிட்டோர், ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !