சாத்தூரில் சூரசம்ஹாரம்
ADDED :4571 days ago
சாத்தூர்: சாத்தூர் இந்து நாடார்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு, பத்ரகாளியம்மன், சூரனை வதம் செய்யும் சூரசம்காரம் நடந்தது. முன்னதாக சிம்மவாகனத்தில் மலர் அலங்காரத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது. சூரபத்மன், மனிதமுகம், யானை முகம், மாடு முகம் கொண்டு அம்மனை எதிர்கொள்ள, பத்ரகாளியம்மன் சூரசம்ஹாரம் செய்தார். இந்நிகழ்ச்சி வடக்குரதவீதி, முக்குராந்தல், நந்தவனப்பட்டி நடுத்தெரு பகுதிகளில் நடந்தது.