குல மாரியம்மன் கோவிலில் தீர்த்தவாரி திருவிழா
ADDED :4643 days ago
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி பக்தர் குல மாரியம்மன் கோவிலில், 46ம் ஆண்டு கோடை தீர்த்தவாரி திருவிழா நடந்தது. இதையொட்டி வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தம் அருகில் உள்ள மண்டபத்தில், மாரியம்மன் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். அவர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.