உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா

வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா

ஊத்துக்கோட்டை: சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது.ஊத்துக்கோட்டையில் உள்ள சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் பலர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கோவில் நிர்வாகத்தினர் கோவிலை சீரமைக்க முடிவ செய்தனர். இதற்காக, பொதுமக்களிடம் நிதி திரட்டப்பட்டது. பக்தர்கள் வழங்கிய நன்கொடை மூலமாக சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. கடந்த ஜன., 18ம் தேதி, கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தேறியது.இதையடுத்து, முதன்முறையாக நேற்று முன்தினம் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு லட்சார்ச்சனை நடந்தது. காலை, 8:00 மணிக்கு துவங்கிய லட்சார்ச்சனை மாலை, 5:00 மணிக்கு நிறைவடைந்தது.பின், ஸ்ரீதேவி, பூதேவியருடன் சுந்தர வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஊத்துக்கோட்டை, சுருட்டபள்ளி, பெரியபாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஊஞ்சலில் சேவை சாதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !